திருக்குறள்- குறள் 1140

குறள் எண் : 1140 யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர். சாலமன் பாப்பையா உரை: நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச்... Read more

திருக்குறள்- குறள் 1139

குறள் எண் : 1139 அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது. சாலமன் பாப்பையா உரை: என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத்... Read more

திருக்குறள்- குறள் 1138

குறள் எண் : 1138 நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே. சாலமன் பாப்பையா உரை: இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று... Read more

திருக்குறள்- குறள் 1137

குறள் எண் : 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை. சாலமன் பாப்பையா உரை: அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல்... Read more

திருக்குறள்- குறள் 1136

குறள் எண் : 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன. சாலமன் பாப்பையா உரை: அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல்... Read more

திருக்குறள்- குறள் 1135

குறள் எண் : 1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள். சாலமன் பாப்பையா உரை: மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை... Read more

திருக்குறள்- குறள் 1134

குறள் எண் : 1134 காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. சாலமன் பாப்பையா உரை: ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு... Read more

திருக்குறள்- குறள் 1133

குறள் எண் : 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். சாலமன் பாப்பையா உரை: நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப்... Read more

திருக்குறள்- குறள் 1132

குறள் எண் : 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன. சாலமன் பாப்பையா உரை: காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை... Read more

திருக்குறள்- குறள் 1131

குறள் எண் : 1131 காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு... Read more