குறள் எண் : 210
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
குறள் விளக்கம்
மு.வரதராசனார் உரை:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்….
சாலமன் பாப்பையா உரை:
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
