குறள் எண் : 230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை
குறள் விளக்கம்
மு.வரதராசனார் உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்….
சாலமன் பாப்பையா உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
கலைஞர் விளக்க உரை: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
