குறள் எண் : 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன. சாலமன் பாப்பையா உரை: காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச்... Read more
குறள் எண் : 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும். சாலமன் பாப்பையா உரை: முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான். கலைஞர்... Read more
குறள் எண் : 1098 அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது. சாலமன் பாப்பையா உரை: யாரோ எவரோ போல அவள் பேசிய... Read more
குறள் எண் : 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும். சாலமன் பாப்பையா உரை: (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும்,... Read more
குறள் எண் : 1096 உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும். சாலமன் பாப்பையா உரை: (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை... Read more
குறள் எண் : 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள். சாலமன் பாப்பையா உரை: நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள்... Read more
குறள் எண் : 1094 யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். சாலமன் பாப்பையா உரை: நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான்... Read more
குறள் எண் : 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும். சாலமன் பாப்பையா உரை: நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள்... Read more
குறள் எண் : 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும். சாலமன் பாப்பையா உரை: நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில்... Read more
குறள் எண் : 1091 இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும். சாலமன் பாப்பையா உரை: இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு... Read more