திருக்குறள்- குறள் 321

8 / 100

குறள் எண் : 321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்….

சாலமன் பாப்பையா உரை:

அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *