திருக்குறள்- குறள் 577

4 / 100

குறள் எண் : 577

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *