திருக்குறள்- குறள் 1090

குறள் எண் : 1090 உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே. சாலமன் பாப்பையா உரை: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.... Read more

திருக்குறள்- குறள் 1089

குறள் எண் : 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ. சாலமன் பாப்பையா உரை: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும்... Read more

திருக்குறள்- குறள் 1088

குறள் எண் : 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. சாலமன் பாப்பையா உரை: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம்,... Read more

திருக்குறள்- குறள் 1087

குறள் எண் : 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது. சாலமன் பாப்பையா உரை: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த... Read more

திருக்குறள்- குறள் 1086

குறள் எண் : 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்னிவள் கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா. சாலமன் பாப்பையா உரை: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள்... Read more

திருக்குறள்- குறள் 1085

குறள் எண் : 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது. சாலமன் பாப்பையா உரை: என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு... Read more

திருக்குறள்- குறள் 1084

குறள் எண் : 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. சாலமன் பாப்பையா உரை: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம்... Read more

திருக்குறள்- குறள் 1083

குறள் எண் : 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. சாலமன் பாப்பையா உரை: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது... Read more

திருக்குறள்- குறள் 1082

குறள் எண் : 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே... Read more

திருக்குறள்- குறள் 1081

குறள் எண் : 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. சாலமன் பாப்பையா உரை: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல்... Read more