குறள் எண் : 1070 கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ. சாலமன் பாப்பையா உரை: இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய்... Read more
குறள் எண் : 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும். சாலமன் பாப்பையா உரை: பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம்... Read more
குறள் எண் : 1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும். சாலமன் பாப்பையா உரை: வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை... Read more
குறள் எண் : 1067 இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற் கரப்பார் இரவன்மின் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன். சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா... Read more
குறள் எண் : 1066 ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை. சாலமன் பாப்பையா உரை: பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும்... Read more
குறள் எண் : 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த துண்ணலின் ஊங்கினிய தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும்... Read more
குறள் எண் : 1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும். சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத... Read more
குறள் எண் : 1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை. சாலமன் பாப்பையா உரை: இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக்... Read more
குறள் எண் : 1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப்... Read more
குறள் எண் : 1061 கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். சாலமன் பாப்பையா உரை: ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக்... Read more