குறள் எண் : 950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. சாலமன் பாப்பையா உரை: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து... Read more
குறள் எண் : 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின்... Read more
குறள் எண் : 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். சாலமன் பாப்பையா உரை: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த... Read more
குறள் எண் : 947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். சாலமன் பாப்பையா உரை: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால்... Read more
குறள் எண் : 946 இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். சாலமன் பாப்பையா உரை: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல்... Read more
குறள் எண் : 945 மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால்... Read more
குறள் எண் : 944 அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். சாலமன் பாப்பையா உரை: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும்... Read more
குறள் எண் : 943 அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். சாலமன் பாப்பையா உரை: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத்... Read more
குறள் எண் : 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து... Read more
குறள் எண் : 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். சாலமன் பாப்பையா உரை: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின்... Read more