திருக்குறள்- குறள் 1329 குறள் எண் : 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு... Read more
திருக்குறள்- குறள் 1323 குறள் எண் : 1323 புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. சாலமன் பாப்பையா உரை: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு... Read more
திருக்குறள்- குறள் 1322 குறள் எண் : 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். சாலமன் பாப்பையா உரை: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால்... Read more
திருக்குறள்- குறள் 1320 குறள் எண் : 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: என் பேச்சிலும், செயலிலும் அவள்... Read more
திருக்குறள்- குறள் 1314 குறள் எண் : 1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும்... Read more
திருக்குறள்- குறள் 1313 குறள் எண் : 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே... Read more
திருக்குறள்- குறள் 1311 குறள் எண் : 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே! நீ... Read more
திருக்குறள்- குறள் 1305 குறள் எண் : 1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு... Read more
திருக்குறள்- குறள் 1304 குறள் எண் : 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி,... Read more
திருக்குறள்- குறள் 1303 குறள் எண் : 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக்... Read more