திருக்குறள்- குறள் 1329 குறள் எண் : 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு... Read more
திருக்குறள்- குறள் 1328 குறள் எண் : 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. சாலமன் பாப்பையா உரை: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன்... Read more
திருக்குறள்- குறள் 1322 குறள் எண் : 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். சாலமன் பாப்பையா உரை: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால்... Read more
திருக்குறள்- குறள் 1319 குறள் எண் : 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும்.... Read more
திருக்குறள்- குறள் 1318 குறள் எண் : 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். சாலமன் பாப்பையா உரை: அடுத்தமுறை தும்மல் வர அதனை... Read more
திருக்குறள்- குறள் 1317 குறள் எண் : 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? சாலமன் பாப்பையா உரை: நான் தும்ம, அவள் இயல்பாகவே... Read more
திருக்குறள்- குறள் 1315 குறள் எண் : 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப்... Read more
திருக்குறள்- குறள் 1314 குறள் எண் : 1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும்... Read more
திருக்குறள்- குறள் 1311 குறள் எண் : 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே! நீ... Read more
திருக்குறள்- குறள் 1310 குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும்... Read more