திருக்குறள்- குறள் 1326 குறள் எண் : 1326 உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை... Read more
திருக்குறள்- குறள் 1324 குறள் எண் : 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. சாலமன் பாப்பையா உரை: என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே... Read more
திருக்குறள்- குறள் 1319 குறள் எண் : 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும்.... Read more
திருக்குறள்- குறள் 1313 குறள் எண் : 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே... Read more
திருக்குறள்- குறள் 1304 குறள் எண் : 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி,... Read more
திருக்குறள்- குறள் 1297 குறள் எண் : 1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன். சாலமன் பாப்பையா உரை: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத,... Read more