திருக்குறள்- குறள் 1176

8 / 100

குறள் எண் : 1176

ஓஒ இனிதே எமக்கிந் நோய்
செய்தகண் தாஅம் இதற்பட் டது.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை:

எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *