திருக்குறள்- குறள் 12

குறள் எண் : 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்….

சாலமன் பாப்பையா உரை:

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *