திருக்குறள்- குறள் 1224

11 / 100

குறள் எண் : 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *