திருக்குறள்- குறள் 1225

11 / 100

குறள் எண் : 1225

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

சாலமன் பாப்பையா உரை:

காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *