திருக்குறள்- குறள் 1306

8 / 100

குறள் எண் : 1306

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

சாலமன் பாப்பையா உரை:

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *