திருக்குறள்- குறள் 197

4 / 100

குறள் எண் : 197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்….

சாலமன் பாப்பையா உரை:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *