திருக்குறள்- குறள் 203

8 / 100

குறள் எண் : 203

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்….

சாலமன் பாப்பையா உரை:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *