திருக்குறள்- குறள் 265

4 / 100

குறள் எண் : 265

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்….

சாலமன் பாப்பையா உரை:

விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *