திருக்குறள்- குறள் 278

4 / 100

குறள் எண் : 278

மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்….

சாலமன் பாப்பையா உரை:

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *