திருக்குறள்- குறள் 290

4 / 100

குறள் எண் : 290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது….

சாலமன் பாப்பையா உரை:

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *