திருக்குறள்- குறள் 303

4 / 100

குறள் எண் : 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்….

சாலமன் பாப்பையா உரை:

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *