திருக்குறள்- குறள் 342

4 / 100

குறள் எண் : 342

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல….

சாலமன் பாப்பையா உரை:

சாலமன் பாப்பையா விளக்க உரை: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *