திருக்குறள்- குறள் 365

4 / 100

குறள் எண் : 365

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்….

சாலமன் பாப்பையா உரை:

ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *