திருக்குறள்- குறள் 366

4 / 100

குறள் எண் : 366

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப
தோரும் அவா

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *