திருக்குறள்- குறள் 39

குறள் எண் : 39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை….

சாலமன் பாப்பையா உரை:

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *