திருக்குறள்- குறள் 429

4 / 100

குறள் எண் : 429

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *