திருக்குறள்- குறள் 432

4 / 100

குறள் எண் : 432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்….

சாலமன் பாப்பையா உரை:

நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது – இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *