திருக்குறள்- குறள் 434

4 / 100

குறள் எண் : 434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *