திருக்குறள்- குறள் 437

4 / 100

குறள் எண் : 437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்….

சாலமன் பாப்பையா உரை:

செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *