திருக்குறள்- குறள் 458

4 / 100

குறள் எண் : 458

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்….

சாலமன் பாப்பையா உரை:

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *