திருக்குறள்- குறள் 529

8 / 100

குறள் எண் : 529

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்….

சாலமன் பாப்பையா உரை:

முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *