திருக்குறள்- குறள் 547

8 / 100

குறள் எண் : 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்….

சாலமன் பாப்பையா உரை:

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *