திருக்குறள்- குறள் 575

8 / 100

குறள் எண் : 575

கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *