திருக்குறள்- குறள் 579

8 / 100

குறள் எண் : 579

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது….

சாலமன் பாப்பையா உரை:

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *