திருக்குறள்- குறள் 623

8 / 100

குறள் எண் : 623

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்....

சாலமன் பாப்பையா உரை:

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *