திருக்குறள்- குறள் 628

8 / 100

குறள் எண் : 628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை....

சாலமன் பாப்பையா உரை:

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *