திருக்குறள்- குறள் 640

8 / 100

குறள் எண் : 640

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே
செய்வர் திறப்பா டிலாஅ தவர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்....

சாலமன் பாப்பையா உரை:

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *