திருக்குறள்- குறள் 652

8 / 100

குறள் எண் : 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்....

சாலமன் பாப்பையா உரை:

இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *