திருக்குறள்- குறள் 670

8 / 100

குறள் எண் : 670

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது….

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *