திருக்குறள்- குறள் 77

குறள் எண் : 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்….

சாலமன் பாப்பையா உரை:

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *