திருக்குறள்- குறள் 93

குறள் எண் : 93

முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்….

சாலமன் பாப்பையா உரை:

பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *