திருக்குறள்- குறள் 96

குறள் எண் : 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்….

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *