குறள் எண் : 242 நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன்... Read more
குறள் எண் : 241 அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்…. சாலமன் பாப்பையா உரை: செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.... Read more
குறள் எண் : 240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்…. சாலமன் பாப்பையா உரை: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப்... Read more
குறள் எண் : 238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்…. சாலமன் பாப்பையா உரை: புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே... Read more
குறள் எண் : 237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?… சாலமன் பாப்பையா உரை: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது... Read more
குறள் எண் : 236 தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது…. சாலமன் பாப்பையா உரை: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ்... Read more
குறள் எண் : 235 நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின்... Read more
குறள் எண் : 234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது….. சாலமன் பாப்பையா உரை: தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே... Read more
குறள் எண் : 233 ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும்... Read more
குறள் எண் : 232 உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்…. சாலமன் பாப்பையா உரை: சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே. கலைஞர்... Read more