குறள் எண் : 70 மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னைக் கல்வி... Read more
குறள் எண் : 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்…. சாலமன் பாப்பையா உரை: தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால்... Read more
குறள் எண் : 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல்... Read more
குறள் எண் : 67 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்…. சாலமன் பாப்பையா உரை: தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப்... Read more
குறள் எண் : 66 குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக்... Read more
குறள் எண் : 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். சாலமன் பாப்பையா உரை: பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக்... Read more
குறள் எண் : 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.... Read more
குறள் எண் : 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். சாலமன் பாப்பையா உரை: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே... Read more
குறள் எண் : 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. சாலமன் பாப்பையா உரை: பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய... Read more
குறள் எண் : 61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர,... Read more