குறள் எண் : 778 உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை... Read more
குறள் எண் : 777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும். சாலமன் பாப்பையா உரை: தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை... Read more
குறள் எண் : 776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். சாலமன் பாப்பையா உரை: ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள்... Read more
குறள் எண் : 775 விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ. சாலமன் பாப்பையா உரை: பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப்... Read more
குறள் எண் : 774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். சாலமன் பாப்பையா உரை: தன்னை எதிர்த்து வந்த... Read more
குறள் எண் : 773 பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.… சாலமன் பாப்பையா உரை: பகைவர் மீது இரக்கம்... Read more
குறள் எண் : 772 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது…. சாலமன் பாப்பையா உரை: காட்டில் அஞ்சி ஓடும் முயலைக்... Read more
குறள் எண் : 771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே... Read more
குறள் எண் : 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்….. சாலமன் பாப்பையா உரை: சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால்... Read more
குறள் எண் : 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்…. சாலமன் பாப்பையா உரை: எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை... Read more