திருக்குறள்- குறள் 498

குறள் எண் : 498 சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்…. சாலமன் பாப்பையா உரை: பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும்... Read more

திருக்குறள்- குறள் 497

குறள் எண் : 497 அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத... Read more

திருக்குறள்- குறள் 496

குறள் எண் : 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது…. சாலமன் பாப்பையா உரை: வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில்... Read more

திருக்குறள்- குறள் 495

குறள் எண் : 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்…. சாலமன் பாப்பையா உரை: முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை... Read more

திருக்குறள்- குறள் 494

குறள் எண் : 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்…. சாலமன் பாப்பையா உரை: ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை... Read more

திருக்குறள்- குறள் 493

குறள் எண் : 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,… சாலமன் பாப்பையா உரை: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து,... Read more

திருக்குறள்- குறள் 492

குறள் எண் : 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்….. சாலமன் பாப்பையா உரை: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல... Read more

திருக்குறள்- குறள் 491

குறள் எண் : 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது…. சாலமன் பாப்பையா உரை: பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா;... Read more

திருக்குறள்- குறள் 490

குறள் எண் : 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மு.வ விளக்க உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒடுங்கி இருக்க... Read more

திருக்குறள்- குறள் 489

குறள் எண் : 489 எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான்... Read more
Index