குறள் எண் : 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை... Read more
குறள் எண் : 587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பா டில்லதே ஒற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்….. சாலமன் பாப்பையா உரை: ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய்,... Read more
குறள் எண் : 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்….. சாலமன் பாப்பையா உரை: செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய... Read more
குறள் எண் : 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஐயுற முடியாத ருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்….. சாலமன் பாப்பையா உரை: பிறர் சந்தேகப்படாத வேடத்தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று,... Read more
குறள் எண் : 584 வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல்,... Read more
குறள் எண் : 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி,... Read more
குறள் எண் : 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள... Read more
குறள் எண் : 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்…. சாலமன் பாப்பையா உரை: ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.... Read more
குறள் எண் : 580 பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்…. சாலமன் பாப்பையா உரை: எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும்... Read more
குறள் எண் : 579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது…. சாலமன் பாப்பையா உரை: தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.... Read more