திருக்குறள்- குறள் 865

8 / 100

குறள் எண் : 865

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் <br>பண்பிலன் பற்றார்க் கினிது

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை:

நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *